நேரடிப் பணிகள் & இணையவழிச் சந்திப்புகள் · 2025–26
வாழை நிகழ்வுகள்
களப்பணிகள்
வருடந்
தோறும்
புதிய பள்ளிகளைக் கண்டறிதல் — ஐயூர் வனப்பகுதி
தேன்கனிக்கோட்டை அருகிலுள்ள ஐயூர் வனப்பகுதி கிராமப்புற அரசுப் பள்ளிகளின் தேவைகளை மதிப்பிடுவதற்கான திட்டமிட்ட களப்பயணங்கள்.
திட்டமிடப்பட்டுள்ளதுமாதந்
தோறும்
வாழ்வியல் திறன் பயிற்சி முகாம்கள்
தொடர்புத் திறன், தலைமைப் பண்பu, கணினி அறிவு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு விழிப்புணர்வுப் பயிற்சிகள்.
ஆண்டிற்கு
3 முறை
மாணவர் திறன் மதிப்பீடு
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அளவிட வாசித்தல், எழுதுதல் மற்றும் உரையாடல் திறன்களுக்கான முறையான மதிப்பீடுகள்.
வருடந்
தோறும்
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்
வாழை அங்கம் வகிக்கும் பள்ளிகளில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் குறித்த நேரடி விழிப்புணர்வு அமர்வுகள்.
ஆண்டு
விழா
பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட வாழைப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள். தோராய மதிப்பு: ₹20,000.
பள்ளி நிகழ்வுவழக்கமான · இணையவழி நிகழ்வுகள்
மாதந்
தோறும்
தன்னார்வலர் ஒன்றுகூடல்
வாழை தன்னார்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து, அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிடும் சந்திப்பு.
ஆன்லைன்வாரந்
தோறும்
வாராந்திரப் பணிப் பகிர்வு
பள்ளித் தோழர்கள், கள ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கலந்துரையாடல். புதிய தன்னார்வலர்களுக்கு வரவேற்பு — தாராளமாக இணைந்து கொள்ளலாம்.
அனைவருக்குமானதுஅடுத்த சனிக்கிழமை சந்திப்பில் எங்களோடு இணையுங்கள்.
முன்பதிவு எதுவும் தேவையில்லை. கலந்து கொண்டு, எங்களின் செயல்பாடுகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இப்பணி உங்களுக்கானது எனத் தோன்றினால், நாம் இணைந்து பயணிக்கலாம்.